“சாரா ஜஸ்மின் உயிரிழக்கவில்லை என்பது தொடர்பில் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும், அவர் இந்தியாவில் இருக்கின்றார் என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.”
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் முஜிபூர் ரஹ்மான் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
சாரா ஜஸ்மின் உயிரிழக்கவில்லை என்பதற்கான சில தகவல்கள் விசாரணைகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன. அவர் இந்தியாவில்தான் இருக்கின்றார் என எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சூழ்ச்சி உள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகின்றது. சில தகவல்களை வெளியிடுவது விசாரணைக்கு இடையூறு விளைவிக்கக்கூடும்.
தேவையேற்படின் எதிர்காலத்தில் அந்த பிடிவிராந்து பெறப்படும்.” – என அமைச்சர் மேலும் கூறினார்.