கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மேலும் விவாதிப்பதற்குரிய வாய்ப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் கிடைக்கப்பெறும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்தார் பிரதமர்.
தரம் 6 ஆங்கில பாடபுத்தகத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை மற்றும் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பிரதமருக்கு மகாநாயக்க தேரர் தெளிவுபடுத்தினார்.
மேற்படி சந்திப்புகளின் பின்னர், பிரதமருக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அவரிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,
“ நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்குரிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. இதன்மூலம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மேலும் இரு நாட்களுக்கு கதைப்பதற்குரிய சூழ்நிலை உருவாகும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை எப்படியும் தோற்கும். எனினும், கல்வி பற்றி கருத்தாடல் உருவாகியுள்ளது வரவேற்கக்கூடிய விடயம்.” – என்றார்.