யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது யாழ். பாதுகாப்பு படை தலைமையகம் அகற்றப்படவுள்ளதாக வெளியாகும் தகவல் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு,
“ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தை அகற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சால் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.
அது தொடர்பில் அடிப்படையற்ற போலியான தகவல்களே சமூகவலைத்தளங்களில் பரப்பட்டுவருகின்றன.
மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இவ்வாறு போலியான தகவல்களை பகிரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தள்ளது.” -என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.