இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடவில் வைத்து அவர் இன்று அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 ஏப்ரலில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பின்னர், மலேசியாவில் உள்ளஇலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளராகவும் பணியாற்றினார்.
அதன் பின்னர், அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.