2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சையாக போட்டியிடுவதற்குரிய கட்டுப்பணத்தை 40 பேர் செலுத்தியுள்ளனர்.
கட்டுப்பணம் செலுத்துவதற்குரிய கால எல்லை நேற்று நண்பகலுடன் நிறைவுபெற்றது. இன்று வேட்பு மனு தாக்கல் இடம்பெறும்.ஜனாதிபதி தேர்தலில் இவ்வாறு 40 பேர் களமிறங்கினாலும் வேட்பாளர்களாக பிரதான வேட்பாளர்களாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகின்றனர்.
ஆளுங்கட்சி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மும்முனை போட்டி பட்டியலில் உள்ளனர்.
சரத்பொன்சேகா, அறகலய காரர்களின் வேட்பாளர் சட்டத்தரணி நுவான் போபகே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, வியாபாரி திலித் ஜயவீர போன்றவர்களும் வேட்பாளர்கள் பட்டியலில் பேசுபொருளாக உள்ளனர்.
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் உட்பட மூன்று தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.