ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (2) நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி நடைபெற்ற இச்சந்திப்பின்போது மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விசேட கவனம் செலுத்தினார்.
மேலும், மலையகப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, தகுதியான தமிழ் மொழி மூல ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான பி. திகம்பரம் , வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகள் இச்சந்திந்திப்பில் கலந்துகொண்டனர்.