முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின்; 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
இன்று காலை 06:00 - 09:30 மணி வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் இடம்பெறுகின்றன.
முற்பகல் 10:15 மணிக்கு முள்ளிவாய்க் கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும்.
முற்பகல் 10:29 மணிக்கு நினைவொளி எழுப்பப்படும்.
முற்பகல் 10:30 மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்படும்.
முற்பகல் 10:31 மணிக்கு பொதுச்சுடர் மற்றும் சமநேரத்தில் ஒற்றைச் சுடர்கள் ஏற்றப்படும்.
முற்பகல் 10:35 மணிக்கு மலர் வணக்கம் செலுத்தப்படும்.
அதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களில் இன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.