" யாழ்ப்பாணம் வந்திருந்தால் சீமானை சுட்டு வீழ்த்தி இருப்பேன்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்
.
நாம் தமிழர் கட்சியையும், அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் அர்ச்சுனா எம்.பி. அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்து வருகின்றார்.
தமிழகம் சென்றிருந்தவேளைகூட சீமான்மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதும் அவர் சீமான்மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்தார்.
“அண்ணன் சீமான், கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை விமர்சித்திருந்தார்.
நான் இந்தியா வரும்போது ஆயுதம் கொண்டுவர முடியாது. அவ்வாறு கொண்டுவந்திருந்தால் உன்னை (சீமானை) சுட்டிருப்பேன்.
நீ யாழ்ப்பாணம் வந்திருந்தால் சுட்டிருப்பேன்.
நீ இந்தியாவிலேயே இரு, திரள் நிதி வரும். நன்றாக சாப்பிடு, ஆனால் இனத்தை விற்காதே, எங்களின் வலியை விற்காதே.” எனவும் படு மோசமாக அர்ச்சுனா விமர்சித்தார்.