“ இராணுவ நினைவு தூபி முன்பாகவே நான் தடுக்கி விழுந்தேன். மாறாக புலி டயஸ்போராக்களின் பாதங்களில் அல்ல.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ அரசாங்கமானது IMF முன்னிலையில் மண்டியிட்டுள்ளது. புலி டயஸ்போராக்களின் முன் விழுந்துள்ளது. அவ்வாறு விழுந்திருப்பதுதான் வெட்கப்பட வேண்டிய விடயம்.
ஆனால் ராணுவ நினைவு தூபி முன்னிலையிலேயே நான் விழுந்தேன். இது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
ராணுவ நினைவு தூபியில் சுதந்திரமாக நினைவு கூருவதற்குரிய உரிமை இருக்க வேண்டும். கடந்த வருடமும் நான் நினைவுகூர்ந்தோம். ஆனால் இந்த வருடம் தடையேற்படுத்தப்பட்டது.
தரையில் சிறு மேட்டு பகுதியொன்று இருந்தது. அதில் மோதியே விழுந்தேன். இது நடிப்பு அல்ல. நான் மது அருந்தி இருந்தேன் என்றெல்லாம் கூறப்படுவது திட்டமிட்ட சேறுபூசும் நடவடிக்கையாகும்.
முள்ளிவாய்க்காலில் புலிகளை நினைவுகூருகின்றனர். வெள்ளவத்தையிலும் நினைவேந்தல் நடத்தப்படுகின்றது. இதற்கு அனுமதி வழங்கிவிட்டு, எமக்கு ஏன் தடை ஏற்படுத்தப்பட வேண்டும்.” என்றார் விமல் வீரவன்ச.