பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. புலி டயஸ்போராக்களை திருப்திபடுத்துவதற்காகவே சுரேஷ் சலே அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்." – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
" நாட்டைவிட்டு தப்பியோடிய அதாச் மௌலான வழங்கிய பொய்யான வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையென்பது உறுதியாகின்றது.
தமிழ் பிரிவினைவாத டயஸ்போராக்களின் நிதி உதவியுடன்தான் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதனால்தான் அவர்களை திருப்திப்படுத்தவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு இம்முறையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புலிகளைத் தோற்கடிப்பதற்கு புலனாய்வுப் பிரிவில் முக்கிய பங்கு வகித்தவர்தான் சுரேஷ் சலே. எனவே, புலிகளை திருப்திப்படுத்தவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.' – என்றார்.