தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால Ananda Wijepalaதெரிவித்தார்.
கிளிநொச்சி இளைஞர் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற் பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்பதை நாடாளுமன்றத்திலும் திட்டவட்டமாக அறிவித்துள்ளோம்.
எனினும், உயிரிழந்த உறவுகளை நினைகூர முடியும்.
புலிகள் அமைப்பின் பாடலை பாடிய , கிளிநொச்சி இளைஞர் ஒருவர் பாடிய அல்லது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த விவகாரம் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் இன்று (நேற்று) சட்டமா அதிபருடன், பொலிஸ்மா அதிபர் கலந்துரையாட உள்ளார். அதன்பின்னர் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.