முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச , கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச , இன்று (17) காலை லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையானதைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையில் அவர் இணைத்துக் கொள்ளப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் ராயல் கடற்படைக் கல்லூரியில் (British Royal Naval College) அவர் மேற்கொண்ட பயிற்சி விவகாரம் தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் விசாரணைக்காக யோஷித ராஜபக்சஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.
அங்கு அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின்னர், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த விசாரணைக்காக நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு முதன்முதலில் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணை ஒன்றின் காரணமாக நேற்றைய தினம் சமூகமளிக்க முடியாது என்பதை அவர் எழுத்துப்பூர்வமாக அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.
இதன் காரணமாகவே, அவர் முன்னிலையாக வேண்டிய நாள் இன்றைய காலைக்கு மாற்றியமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.