இலங்கையில் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்துவருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது. சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
கடும் மழையால் நுவரெலியா, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இவ்விரு மாவட்டங்களிலும் சில கல்வி வலயங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் பல தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வுpவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.