தனது கடைசி நாடாளுமன்ற உரையெனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்று ஆற்றிய உரையில், ஒரு இடத்திலேனும் தமிழ் மொழியை பயன்படுத்தவில்லை. சிங்கள மொழியில் மாத்திரமே கடைசி உரையை நிகழ்த்தி இருந்தார்.
சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேல் உரையாற்றிய அவர், நகைச்சுவை பாணியிலும் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
“நான் அங்கொடையிலும் வேலை செய்துள்ளேன். மருத்துவ துறையில் 20 வருடங்கள் இருக்கின்றேன். எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.” எனவும் அர்ச்சுனா எம்.பி. சுட்டிக்காட்டி இருந்தார்.
“என்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை, மண்டியிட்டு வாழ்வதைவிட மரணிப்பதுமேல், நான் ஒருபோதும் மண்டியிடமாட்டேன்.
என்னை பாதுகாத்தவர்கள் இன்னு மண்ணுக்குள் இருக்கின்றனர். ஆனால் உங்களை பாதுகாத்தவர்கள் பற்றி நீங்கள் (ஆளுங்கட்சி) கதைப்பதில்லை. வெட்கம்” எனவும் அர்ச்சுனா எம்.பி. விமர்சித்தார்.
தனது வார்த்தை பிரயோகத்தில் ஏதேனும் தவறு இருந்திருந்தால், மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகின்றேன் எனவும் சிங்கள மொழியில் அர்ச்சுனா எம்.பி. குறிப்பிட்டிருந்தார்.
தனது வழக்கு விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ நான் தமிழன் என்பதை மறக்கமாட்டேன். தமிழன் எனக் கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அதேபோல ஏனைய இன மக்களையும் நேசிக்கின்றேன்.” என அவர் மேலும் கூறினார்.